நடிகர் சித்தார்த் - சமந்தா இடையே காதலா?
நடிகர் சித்தார்த் - சமந்தாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா திருமணம்
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அண்மையில் நடிகை நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிகை சமந்தாவுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2017 ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்து மற்றும் கிறிஸ்தவம் என இரண்டு மத முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சமந்தாவுக்கு 2-வது திருமணமா?
இந்த நிலையில் அண்மையில் கூட பேட்டி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கணவர் என்று குறிப்பிட்டதற்கு குறுக்கிட்ட சமந்தா முன்னாள் கணவர் என்று கூறினார்.
மேலும் நாக சைதன்யா - சமந்தா திருமணத்திற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை சமந்தா காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டது.
அப்போது சமந்தா - சித்தார்த் இருவரும் பூஜை ஒன்றில் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் சமந்தாவுக்கு 2-வது திருமணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படம் பூஜை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.