அதுக்காகவே காதலிங்க; கத்துக்கோங்க.. மாறி மாறி முத்தம் கொஞ்சிய சித்தார்த் - வைரல் வீடியோ!

Siddharth Tamil Cinema Viral Video
By Sumathi Jan 28, 2024 05:30 PM GMT
Report

சித்தார்த் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகர் சித்தார்த்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர்.

actor siddharth

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து, நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்வார்.

என் இதய இளவரசியே.. அதிதியுடன் காதலை உறுதிப்படுத்திய சித்தார்த்?

என் இதய இளவரசியே.. அதிதியுடன் காதலை உறுதிப்படுத்திய சித்தார்த்?

வைரல் வீடியோ

இருப்பினும், பொதுவெளிகளில் இருவரும் ஒன்றாக செல்லும் வீடியோ அடிக்கடி வெளியாகி வைரலாகும். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வர் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கு கேப்ஷனாக 'காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.