நிறைய தவறு; அப்படி அழுவேன்.. பார்த்து சந்தோஷப்படுவார் - அதிதி குறித்து சித்தார்த் பளீச்!
நடிகை அதிதி குறித்து சித்தார்த் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
சித்தார்த்-அதிதி
நடிகர் சித்தார்த் இறுதியாக தமிழில் சித்தா படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோல் ஏற்று நடித்திருந்தார்.
இதற்கிடையில் நடிகை அதிதியை காதலித்துவந்த நிலையில் இருவரும் ஹைதராபாத்தில் எளிமையாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் சித்தார்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
நிறைய தவறு
“நான் ஐந்து நிமிடங்களுக்குள் நிறைய தவறுகளை செய்வேன். எனவே அதிதியிடம் ஐ லவ் யூ என்ற வார்த்தையைவிடவும் மன்னித்துக்கொள் என்ற வார்த்தையைத்தான் அதிகம் யூஸ் செய்வேன்.
90 சதவீதம் நான் மன்னிப்புதான் கேட்பேன். அவர் காலையில் எழுந்தவுடனேயே என்னுடைய விருப்பமே இல்லாமல் என்னை எழுப்பிவிடுவார். ஐயோ எனது நாள் தொடங்கிவிட்டதே என்று அழுதபடியேதான் எழுவேன்.
அதிதியோ ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயை பறித்துக்கொண்டதுபோல் என்னை பார்த்து சந்தோஷப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.