அவர் என் கூடதான் இருக்கார்; வெளி உலகம் தெரிந்தது - மனம் திறந்த நடிகை மீனா!
நடிகை மீனா தன்னுடைய 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.
அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார். இன்று தன்னுடைய 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
48 வது பிறந்தநாள்
நான் இரண்டு பேரை இங்கு மிகவும் மிஸ் செய்கிறேன். ஒன்று என்னுடைய அப்பா, இன்னொன்று என்னுடைய கணவர். இப்போதும் எங்களுடன் தான் இங்கு இருக்கிறார்கள். கணவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

எப்போதும் உன்னுடைய அம்மாவையே சார்ந்து இருக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். ஷூட்டிங்கிற்கு தனியாகச் செல் என்பார். என்னிடம் அப்படி தொடர்ந்து சொல்லி சொல்லி தைரியமானவளாக மாற்றினார்.
அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு தான் வெளி உலகம் என்றால் என்ன என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். எனக்கு ‘நோ’ சொல்ல கற்றுக் கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ் IBC Tamil