மீனாவின் பிரம்மாண்ட வீடு - மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Meena Tamil Cinema Chennai
By Sumathi Apr 02, 2024 02:30 PM GMT
Report

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

பிரபல நடிகருடன் ரகசிய திருமணம்; கண்டிப்பாக அழைப்பேன் - நடிகை மீனா!

பிரபல நடிகருடன் ரகசிய திருமணம்; கண்டிப்பாக அழைப்பேன் - நடிகை மீனா!


சொத்து மதிப்பு 

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார். மீனாவுக்கு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது.

மீனாவின் பிரம்மாண்ட வீடு - மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details Viral

கேரள முறைப்படி அந்த வீட்டை கட்டியுள்ளார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மீனா நடிகையாக இருந்தபோது சேர்த்தது, அவரது கணவர் இருந்தபோது சேர்த்தது என 35 முதல் 40 கோடி ருபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.