பிரபல நடிகருடன் ரகசிய திருமணம்; கண்டிப்பாக அழைப்பேன் - நடிகை மீனா!

Meena Tamil Cinema
By Sumathi Mar 09, 2024 02:30 PM GMT
Report

திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை மீனா பதிலடி கொடுத்த தகவல் தற்போது கவனம் பெற்றுவருகிறது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வேணாம்.. விட்ருங்கனு கெஞ்சிதான் வெளில வந்தேன் - பிரபல இயக்குநர் குறித்து மீனா பளீச்!

வேணாம்.. விட்ருங்கனு கெஞ்சிதான் வெளில வந்தேன் - பிரபல இயக்குநர் குறித்து மீனா பளீச்!

ரகசிய திருமணம்

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில், பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடிகை மீனாவை ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

meena - kiccha sudeep

அதன் பிறகு அவரை பிரிந்து வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார் என்று வதந்தி பரவியது. தொடர்ந்து இதுகுறித்து பேசிய மீனா, கிச்சா சுதீப்பும் நானும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் இருவருக்கும் உள்ள பழக்கம். அதைத் தாண்டி எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல்களிலெல்லாம் உண்மை கிடையாது.

ஒருவேளை எனக்கு யாருடனாவது திருமணம் நடந்தால் நானே அனைவரையும் அழைப்பேன் எனத் தெரிவித்த சம்பவம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது..