மீனாவுக்கு அப்படி ஒரு கணவர்.. அதெல்லாம் பெரிய விஷயம் - ரகசியம் பகிர்ந்த கலா மாஸ்டர்!
மீனா கணவர் குறித்து கலா மாஸ்டர் உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கலா மாஸ்டர் உருக்கம்
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில், மீனாவுடன் நெருக்கமான உறவில் உள்ள கலா மாஸ்டர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் மீனா வீட்டிற்குதான் செல்வேன். அவரது கணவர் மிகவும் நல்ல மனிதர். நல்ல நண்பராக இருந்தார். மீனாவுக்கு அப்படி ஒரு கணவர் கிடைத்தது மிகவும் பெரிய விஷயம் எனப் பேசியுள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
