திருமணமான நடிகருடன் வெளிநாட்டில் இரவு விருந்து - வைரலாகும் மீனாவின் வீடியோ!

Napoleon Meena Viral Video United States of America
By Sumathi Dec 28, 2023 02:30 PM GMT
Report

நடிகை மீனா பகிர்ந்துள்ள பிறந்தநாள் பார்ட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

napoleon birthday party

பிறந்தநாள் பார்ட்டி

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் என தலைகாட்டி வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் நடிகர் நெப்போலியன் தன்னுடைய 60வது பிறந்தநாளை கடந்த 2 ஆம் தேதி பிரபலங்கள் உட்பட பலருடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை மீனா மற்றும் நடிகை குஷ்பூவும் கலந்துக்கொண்டனர்.

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்!

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்!

அங்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் அளித்த இரவு விருந்திலும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை மீனா பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.