இப்படித்தான் மாப்பிள்ளை வேணும் - ரகசியம் பகிர்ந்த மீனா!
Meena
By Sumathi
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நைனிகா என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு மீனாவின் கணவர் உயிரிழந்தார். அதன்பின், நடிகை மீனா மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சினி உலகம் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது 40 வருட சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணல் இதோ...