2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்!

Meena
By Sumathi May 22, 2023 07:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்! | Bayilvan Ranganathan Opens Up About Actress Meena

2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

 மீனா 40 

அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் தலை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா திரைத்துறைக்கு வந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை மீனா 40 என்ற பெயரில் விழாவாக கொண்டாடினர்.

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்! | Bayilvan Ranganathan Opens Up About Actress Meena

இதில் ரஜினிகாந்த், பிரபுதேவா, பாக்யராஜ், ராஜ்கிரண், ரோஜா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் மீனா மறுத்துவிட்டாராம். ஆனால் விடாமல் முயற்சித்த அந்த யூட்யூப் சேனல், இரவு 8 மணியிலிருந்து 10 மணிவரைதான் நிகழ்ச்சி நடத்துகிறோம்.

அதற்காக உங்களுக்கு 13 லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறோம் என கூறியதாம். இதனையடுத்து மீனா ஒத்துக்கொண்டாராம். அதுமட்டுமின்றி, ரஜினியையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தால் இதன் ரீச் நன்றாக இருக்கும் என யூட்யூப் சேனல்காரர்கள் கூற, நான் சொன்னால் ரஜினி சார் உடனே வந்துவிடுவார் என கூறி ரஜினியையும் அழைத்து வந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.