வேணாம்.. விட்ருங்கனு கெஞ்சிதான் வெளில வந்தேன் - பிரபல இயக்குநர் குறித்து மீனா பளீச்!
பட வாய்ப்பொன்றை மிஸ் செய்தது குறித்து நடிகை மீனா பகிர்ந்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்தவர் மீனா. 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
நாட்டாமை
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நாட்டாமை திரைப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நான் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தி கேட்டார்கள்.
நாட்டாமை திரைப்படத்தில் நடிகை குஷ்பு இருக்கிறார். நடிகை சங்கவி இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்றெல்லாம் தெரியும். இவர்கள் இருவரும் இருக்கும் பொழுது நமக்கு என்ன அங்கு வேலை இருக்கப் போகிறது என்று யோசித்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். எனவே கால் சீட் கொடுக்க முடியாத நிலை.
எனவே ரொம்ப டைட்டா இருக்கு. வேணாம் விட்ருங்க. என கெஞ்சி தான் படத்தில் இருந்து வெளியே வந்தேன்.
ஆனால், தற்போது எனக்கு விருப்பமான இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார் தான் முதல் இடத்தில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.