ஜெயம்ரவி விவாகரத்து விவகாரம்; இந்த பாடகிதான் காரணம் - தீயாய் பரவும் தகவல்!
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினரின் பிரிவுக்கு, பாடகி ஒருவர்தான் காரணம் என கூறப்படுகிறது.
ஜெயம் ரவி - ஆர்த்தி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தற்போது, ஜெயம்ரவியின் Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடித்து வருவதாகவும், விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு அவர் திடீரென கோவாவுக்கு தனியாக டூர் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவா சென்றபோது, ஜெயம் ரவியின் காரில் பாடகி ஒருவர் இருந்தாராம்..
விவாகரத்து
பெங்களூரை சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். ந்த பாடகி தமிழ் படங்களிலும், ஆல்பங்களிலும் பாடியுள்ளார். ஆன்மீக மன வளர்ச்சியாளராகவும் வலம் வருகிறார். பப்புகளில் பாடி வருவதால், கோவாவிலுள்ள பப்புகளிலும் பாடி வந்துள்ளார். அப்போதுதான் ஜெயம்ரவிக்கு நட்பானதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஜுன் 24ம் தேதி, தன்னுடைய சொகுசு காரில் காரில் பாடகியுடன் கோவா சென்றிருந்தாராம்.. கார்களில் போடப்படும் டின்ட், அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக இருந்ததற்காக அபராதமும், ஓவர் ஸ்பீடில் காரில் சென்றதற்காக அபராதமும் கோவா காவல்துறை விதித்துள்ளது.
திருமண தினத்தன்றுகூட, பாடகியுடன் காரில் சுற்றியதால்தான், இன்ஸ்டா போட்டோக்களை ஆர்த்தி நீக்கியதாக கூறப்படுகிறது.