ஆபாச படங்களை பார்த்து வந்த அண்ணன், தங்கை - இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Sexual harassment Karnataka India Bengaluru Crime
By Jiyath May 22, 2024 03:54 AM GMT
Report

தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாலியல் வன்கொடுமை 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் பாகலகுண்டே பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் 14 வயது என கூறப்படுகிறது.

ஆபாச படங்களை பார்த்து வந்த அண்ணன், தங்கை - இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! | Siblings Watch Porn Together Brother Rapes Sister

இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது செல்போனில் ஒன்றாக ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர். பின்னர் அந்த சிறுவன் தனது தங்கயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சிறுமையை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட 3 இளம்பெண்கள் - பாடம் புகட்டிய போலீசார்!

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட 3 இளம்பெண்கள் - பாடம் புகட்டிய போலீசார்!


சிறுவன் கைது 

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாகலகுண்டே போலீசாருக்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் தகவல் கொடுத்தார்.

ஆபாச படங்களை பார்த்து வந்த அண்ணன், தங்கை - இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! | Siblings Watch Porn Together Brother Rapes Sister

அதன் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததில் தான் கர்ப்பமானதாக சிறுமி கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.