21 ஆண்டு மண வாழ்க்கை; 21 நிமிடங்களில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!
நீதிமன்றத்தில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறாக விவாகரத்து
விவாகரத்து வழக்குகளுக்கு ஆன்லைன் மூலமாகவே விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படும் வழக்கம் சில நாடுகளில் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், லண்டனை சேர்ந்த திரு மற்றும் திருமதி வில்லியம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தம்பதி 21 ஆண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து பெற விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு நிதி தொடர்பான விவகாரங்கள் கருதி இவ்வழக்கு இழுபறியில் இருந்து வந்துள்ளது. அதே சமயத்தில் வேறொரு தம்பதியும் விவாரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்த தம்பதிகளின் விவாகரத்துக்காக ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இச்சுழலில் ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதிக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன்லைனில் வில்லியம்ஸ் தம்பதியின் கணக்கை க்ளிக் செய்ததால் அது நீதிமன்ற விசாரணைக்குச் சென்றுவிட்டது.
வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கை நீதிமன்றம் 21 நிமிடங்களில் தவறுதலாக விவாகரத்து உத்தரவை வழங்கிவிட்டது. இந்த சம்பவம் குறித்து பேசிய டும்ப நலப் பிரிவு நீதிபதி, " வழக்கறிஞர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழக்கு கோப்பை திறப்பதற்கு பதிலாக வில்லியம் தம்பதியின் கோப்பைத் திறந்து,
அந்த வழக்கில் இறுதி உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார். இவ்வாறு ஒரு தவறு நடந்து இருக்கிறது என்று இரண்டு நாள்களுக்குப் பிறகு கண்டறிந்த வழக்கறிஞர்கள், வில்லியம்ஸ் தம்பதி வழக்கில் வழங்கப்பட்ட இறுதி விவாகரத்து உத்தரவை ரத்துசெய்யக் கோரி, அங்குள்ள உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
அப்போது வழக்கலைஞர் தவறாக பொத்தானை அழுத்தியதால் வேறு வழக்குக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த இறுதி விவாகரத்து உத்தரவில் மாற்றம் செய்வது மக்களுக்கு நீதியின் மேல் உள்ள நம்பகத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக் குறைத்துவிடும்.
ஆன்லைன் விவாகரத்து விவகாரங்களில் தவறான பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் விரும்பத்தகாத விவாகரத்து கிடைக்க வாய்ப்புள்ளது என்ற என்ற எண்ணத்தையும் உடனடியாக சரி செய்வது அவசியம் என்று கூறி, வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.