ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட 3 இளம்பெண்கள் - பாடம் புகட்டிய போலீசார்!

Tamil nadu trichy
By Jiyath May 22, 2024 03:14 AM GMT
Report

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட 3 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ரீல்ஸ் வீடியோ 

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை உள்ளிட்ட இடங்களில் "`மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு 3 இளம் பெண்கள் நடனமாடினார். அதனை வீடியோவாகவும் பதிவுசெய்து சமூகவலைத்தளத்தில் ரீல்ஸாக பதிவிட்டனர்.

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட 3 இளம்பெண்கள் - பாடம் புகட்டிய போலீசார்! | Reels In Trichy Railway Station 4 Arrested

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

லாட்ஜில் 5 வாலிபர்களுடன் சிக்கிய கேரள மாடல் அழகி - அறையை திறந்ததும் அதிர்ந்த போலீசார்!

லாட்ஜில் 5 வாலிபர்களுடன் சிக்கிய கேரள மாடல் அழகி - அறையை திறந்ததும் அதிர்ந்த போலீசார்!

4 பேர் கைது 

இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், நடனமாடிய 3 பெண்கள் மற்றும் வீடியோ எடுத்த ஒரு இளைஞர் என 4 போரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட 3 இளம்பெண்கள் - பாடம் புகட்டிய போலீசார்! | Reels In Trichy Railway Station 4 Arrested

இதனையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், உரிய அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.