டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர்தான் - பும்ராவை ஓரம்கட்டிய பிசிசிஐ
இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இரண்டு இளம் வீரர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் அணி
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகியதோடு, விராட் கோலியும் விலகுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்தியா 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுதியானவர் என்றாலும், அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய கேப்டன்?
எனவே, அவருக்கு கேப்டன் பதவியை அளிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.