ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த வாருங்கள் - பிரபல நாடு அழைப்பு
ஐபிஎல் போட்டிகளை நடத்த பிரபல நாடு அழைப்பு விடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இங்கிலாந்து அழைப்பு
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது சாத்தியமில்லை. அனேகமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடத்தலாம் என கூறப்பட்டது.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "எங்கள் நாட்டில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வாருங்கள்" என அழைப்பு விடுத்துள்ளது.