சுப்மன் கில் - சாரா இடையே வயது வித்தியாசம் தெரியுமா? சச்சினை பின்பற்றிய மகள்!
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இடையே உள்ள வயது வித்தியாசம் கவனம் பெற்றுள்ளது.
சுப்மன் கில்-சாரா
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருகின்றனர்.
ஆனால் இருவருமே இதனை பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவில்லை. சாரா டெண்டுல்கர் அண்மையில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டார்.
வயது வித்தியாசம்
மாடலிங் துறை மூலமாக ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை சாரா வருமானம் ஈட்டி வருகிறார். மேலும், சாரா டெண்டுல்கர் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சுப்மன் கில் 25 வயதை எட்டியுள்ளார். சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டியுள்ளார். இருவருக்கும் இடையில் 2 வயது வித்தியாசம் உள்ளது.
இதனால் தந்தையை போல் மகள் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். சச்சினை விடவும் அஞ்சலி 2 வயது சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.