ரொனால்டோவுக்கு திருமணம் - 5 குழந்தைகள் உள்ள நிலையில் காதலியுடன் நிச்சயம்!
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், ஜார்ஜியானா ரோட்டரிக்குயூம் திருமணம் செய்து கொள்ளாமல் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர்.
கூக்கி நிறுவன கடையில் விற்பனையாளராக ஜார்ஜியானா இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்து காதலாக மாறியது. பின் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன்பின் இந்த தம்பதியினருக்கு அலானா மாட்டினா, பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தது.
விரைவில் திருமணம்
மேலும் ரொனால்டோவின் மற்றும் மூன்று குழந்தைகளையும் ஜார்ஜியானா வளர்த்து வந்தார். இதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்தனர்.
அந்த நேரத்தில் ரொனால்டோ, விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தம்மை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார்.
இதற்கு ஜார்ஜினாவும் ஆம் என்று கூறி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அல் நஸ்ர் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.