Asia cup: யாருக்கு வாய்ப்பு? யாரெல்லாம் நீக்கம் - பிசிசிஐ முடிவு!
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆசியக் கோப்பை 2025
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 28 வரை நடைபெறவுள்ளது.
குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும், குரூப் B-இல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
தவிர, இரு அணிகளும் சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் என கூறப்படுகிறது. இதில் ஓபனர்கள் இடங்களில் யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுடன், ஷுப்மன் கில்லை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம்.
இந்திய அணி
விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் அதிரடி பேட்டர் திலக் வர்மா, பேக்கப் கீப்பராக துரூவ் ஜோரல் அல்லது ஜிதேஷ் சர்மா இருப்பார். ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், அடுத்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முழுநேர பேட்டர்களாக இருப்பார்கள்.
சுஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்டராகவும், அதனைத் தொடர்ந்து, ஆல்-ரவுண்டர்கள்தான் அணியில் இருப்பார்கள் என பிசிசிஐ முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுல்கூட, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யாததால், அவர் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இதன்படி சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்ஷித் கிருஷ்ணா, ஜூரல் ஆகிய அனைவரும் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.