சம்பளம் கூட வேண்டாம்; ஆனால், சிவகார்த்திகேயன் கூட முடியாது - ஸ்ட்ரிக்டா சொன்ன முன்னணி நடிகை!

Sivakarthikeyan Shruti Haasan
By Sumathi Jun 13, 2024 05:30 PM GMT
Report

முன்னணி நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க முடியாது எனக் கூறியதாக தகவல் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

sivakarthikeyan

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். எஸ்.கே. 23 என்ற ஒர்க்கிங் டைட்டிலின் கீழ் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

லோகேஷை லவ் பண்ணாம எப்படி; இவ்வளவு நெருக்கம் இதனால்தான் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

லோகேஷை லவ் பண்ணாம எப்படி; இவ்வளவு நெருக்கம் இதனால்தான் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!


நடிக்க மறுத்த நடிகை

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ருதிஹாசன் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் முதலில் கமிட்டாகியது ஸ்ருதிஹாசன் தான்.

shruti haasan

சூட்டிங் ரெடியான சமயத்தில் திடீரென சிவகார்த்திகேயன் எல்லாம் சின்ன ஹீரோ அவருடன் எப்படி நான் நடிப்பது எனக் கூறி ஸ்ருதி பின்வாங்கி விட்டாராம்.

மேலும், ஒரு முறை கமலஹாசன் பற்றி சிவகார்த்திகேயன் தவறாக பேசியதால் அந்த சமயத்தில், சம்பளமே இல்லாம கூட நடிப்பேன் சிவா கூட முடியாது என்றும் கூறியதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.