சினிமாவில் பாலியல் தொல்லை - ஸ்ருதிஹாசன் பளீச் ஸ்டேட்மெண்ட்!
சினிமா உலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகமும் ஆணாதிக்கம் நிறைந்ததுதான் என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
நடிகையும், இசைக்கலைஞருமான ஸ்ருதி ஹாசன் தெலுங்கு திரைப்படத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறைவு செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டுகளில் திரைத்துறை கண்ட மிகப்பெரிய வெற்றிகளில் சிலவற்றில் தனது பங்களிப்பையும் ஸ்ருதி வழங்கியுள்ளார்.
பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக சலார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக Chiru 154 மற்றும் பாலகிருஷ்ணாவுடன் NPK 107 ஆகிய படங்களை ஸ்ருதி கைவசம் வைத்துள்ளார்.
ஆணாதிக்க சமூகம்
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த ஸ்ருதி ஹாசன், “சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு சினிமா துறையில் ஆணாதிக்கம்தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ் பெண்கள், சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், சினிமாவை மட்டும் ஒதுக்குவது ஏற்புடையதல்ல. உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பே திரையுலகத்தில் பாலியல் தொந்தரவு தரும் சூழலும் உள்ளது.
பாலியல் தொந்தரவு
இதையெல்லாம் மீறித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. நட்சத்திரக் குழந்தைகளுக்கு பட வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தொழில்துறையில் நுழைவதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறார்கள்.
அதன் பிறகு, அவர்கள் துறையில் நிலைப்பதற்கு அவர்களுக்கு சொந்த திறமை இருக்க வேண்டும். நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் எனக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை இப்போதும் நான் எனதுசொந்த காலில் தான் நிற்கிறேன். இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.