மனைவி டார்ச்சர் செய்ததாக உறுதி; விவாகரத்து பெற்ற ஷிகர் தவான் - வெளியான அதிர்ச்சிகரமான உண்மைகள்!
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது.
ஷிகர் தவான்
இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
திடீரென இவரை பிரிந்து மகனையும் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றுவிட்டார். தொடர்ந்து, டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு விவகாரத்து வேண்டும் தவான் வழக்கு தாக்கல் செய்தார்.
விவாகரத்து
விசாரணையில் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தவானை மன ரீதியில் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக தெரியவந்தது. மேலும் அவரது பணத்தில், ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி விட்டு அதனை தமது பெயருக்கு எழுதிக் கொடுக்க ஆயிஷா முகர்ஜி தவானை வற்புறுத்தியுள்ளார்.
தமது முன்னாள் கணவருக்கு பிறந்த மகள்களின் கல்வி செலவை ஷிகர் தவான் ஏற்றுக்கொண்டு மாதம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி ஹரிஷ் குமார் அறிவித்தார். மேலும் மகனை அடிக்கடி இந்தியா வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.