பாலிவுட்டில் களமிறங்கும் ஷிகர் தவான் - இந்த ஹீரோயினோடயா!
ஷிகர் தவான் பாலிவுட்டில் Double XL திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.
ஷிகர் தவான்
இதுவரை கிரிக்கெட்டில் வலம் வந்த தவான் இப்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் 'Double XL' என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமுகமாகவுள்ள தவான், காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரேஷியுடன் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஜாகீர் இக்பால், மஹத் ராகவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். பூஷன் குமார், கிரிஷன் குமார், விபுல் டி ஷா, அஷ்வின் வர்டே, ராஜேஷ் பாஹ்ல், சாகிப் சலீம், ஹூமா குரேஷி மற்றும் முடாஸ்ஸர் அஜீஸ் ஆகியோர் மற்றும் டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ், ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பாலிவுட்டில்..
இந்நிலையில் தற்போது தவான் மற்றும் ஹூமா குரேஷி இருவரும் நடனம் ஆடுவது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் இரண்டு உடல் பருமன் கொண்ட பெண்களின் விளையாட்டு வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் ராஜ்ஸ்ரீ திரிவேதி எனும் கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி மற்றும் ஃபேஷன் டிசைனர் சாய்ரா கண்ணா கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சத்திரம் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி Netflix-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil