கழிவறையில் கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம் - ஷிகர் தவான் வருத்தம்

Shikhar Dhawan Viral Video Uttar Pradesh
By Nandhini 1 வாரம் முன்

உ.பி.யில் கபடி போட்டியில் கலந்து கொண்ட பெண் வீரர்களுக்கு கழிவறை தரையில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 

கழிவறையில் வழங்கப்பட்ட உணவு

உத்தரபிரதேச மாநிலம், சஹ்ரான்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட பெண் வீரர்களுக்கு கழிவறையின் தரையில் உணவு வழங்கப்படுவது. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வருத்தம்

இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்கள் கழிவறையில் உணவு உண்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை டேக் செய்து, இந்த சம்பவம் தொடர்பாக பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் ஷிகர் தவான்.   

shikhar-dhawan-toilet-kabaddi-player-food