Sunday, Jul 6, 2025

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த பிரபல வீரர் - 2 குழந்தைகளுக்கு தாய் வேறு.!

Shikhar Dhawan
By Sumathi 2 years ago
Report

 ஷிகர் தவான் தன்னை விட 10 வயதை மூத்த பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

 ஷிகர் தவான்

இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆயிஷா முகர்ஜியின் தந்தை பெங்காலி, தாய் பிரிட்டிஷை சேர்ந்தவர்.

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த பிரபல வீரர் - 2 குழந்தைகளுக்கு தாய் வேறு.! | Shikhar Dhawan Love Separation Ayesha Mukherjee

ஆஸ்திரேலியாவில் வளர்ந்ததால், இவருக்கு குத்துச்சண்டை மீதான ஆர்வம் அதிகமாகியது. இதனால் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்ட அவர், பிரபல குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வந்தார்.

திருமணம்

அதன்பின், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார். இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த பிரபல வீரர் - 2 குழந்தைகளுக்கு தாய் வேறு.! | Shikhar Dhawan Love Separation Ayesha Mukherjee

இதன்பின் ஹர்பஜன் சிங் மூலமாக ஷிகர் தவானுடன் பழக்கம் ஏற்பட, இருவரும் சில காலங்கள் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திடீரென இவரை பிரிந்து மகனையும் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.