மனைவி என்னை மிரட்டுகிறார்... - வீரர் ஷிகர் தவான் புகார் - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
வீரர் ஷிகர் தவான் திருமணம்
ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளை ஷிகர் தவான் தத்து எடுத்த நிலையில், இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர். முகர்ஜி, இந்திய கிரிக்கெட் ஷிகர் தவானை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர் ஷிகர் தவான் புகார்
இந்நிலையில், ஆஷா முகர்ஜி தன்னை அவதூறாக மிரட்டியதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் ஷிகர் தவான் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் மல்ஹோத்ரா முன் தன் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறான செய்திகளை அவர் பரப்பியதாகவும் தவான் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஷிகர் தவானின் முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி, தனது கணவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளைப் பகிர்வதற்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தவான் மீது முகர்ஜிக்கு "உண்மையான" குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாக்கல் செய்வதைத் தடுக்க முடியாது என்று நீதிபதி ஹரிஷ் குமார் கூறினார்.