நெருப்புடன் விளையாடாதீங்க..எரிந்து போவீங்க - ஹசீனா பகிரங்க எச்சரிக்கை
தீயுடன் விளையாடினால், அது உங்களையே எரித்துவிடும் என ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர் போராட்டம்
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுத்தது. ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கைகளுக்கு இந்தியா இன்னும் செவி சாய்க்கவில்லை.
தற்போது இடைக்கால தலைவராக முகம்மது யூனுஸ் உள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஷேக் ஹசீனா, ‘தனது அதிகாரப்பசிக்காக வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்து தேசத்தை வீழ்ச்சி அடைய வைத்துள்ளார்.
ஷேக் ஹசீனா எச்சரிக்கை
வங்கதேசத்தின் சுதந்திர போராட்டம் தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டாக்காரர்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளார்கள். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர போரட்டக்காரர்களுக்காக வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளன.
ஆனால் அவைகள் எரிக்கப்பட்டுள்ளன. முகம்மது யூனுஸ் இதை நியாயப்படுத்துகிறாரா? நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர்,
அதிகார பசி, பண பசி, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அளிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.