Excuse Me எனக்கூறிய 2 பெண்கள் - மராத்தியில் பேசாததால் இளைஞர்கள் வெறிச்செயல்!
ஆங்கிலத்தில் பேசிய காரணத்திற்காக பெண்கள் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலம் பேசிய பெண்கள்
மகாராஷ்டிரா, டோம்பிவ்லியில் இரண்டு பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர்களிடம் இனிமேல் இங்கு மராத்தி மொழியில் மட்டும் தான் பேச வேண்டும் என மிரட்டியுள்ளார். உடனே அதில் ஒரு பெண், "எக்ஸ்கியூஸ்மீ" என ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
கொடூர தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் எக்ஸ்கியூஸ்மீ என மரத்தியில் சொல்ல முடியாதா எனக் கேட்டு 2 பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளைஞருடன் சிலர் சேர்ந்து கொண்டு இரண்டு பெண்களையும் திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குறிப்பாக ஒரு பெண்ணின் கையில் கைக்குழந்தை இருப்பது என்பதையும் மீறி அடித்து உதைத்துள்ளனர். உடனே அந்த பெண்கள் போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.