மருமகனுடன் வீட்டைவிட்டு வெறியேறிய மாமியார் - கதறும் மகள்
நகைகளுடன் மருமகனுடன், மாமியார் வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளுடன் நிச்சயம்
உத்தர பிரதேசம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து வரன் ஒன்றை முடிவு செய்து, 16-ந்தேதி மணமக்களுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர்.
பின் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில், திருமண வேலைக்காக மாப்பிள்ளை, பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதில் மாமியாருடன் நெருக்கமாகியுள்ளார்.
மாமியாருடன் திருமணம்
தொடர்ந்து அவருக்கு ஒரு செல்போன் வாங்கிகொடுத்து இருவரும் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் மாமியார்-மருமகன் உறவு காதலாக மாறியுள்ளது. இதனால் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கிளம்பிவிட்டனர்.
மேலும், மாமியார் மகளுக்காக கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பத்திரிகை வழங்குவதற்காக தாய் வெளியே சென்றிருப்பதாக நினைத்த உறவினர்கள், தேடி பார்த்ததில் நகையும் பணமும் காணாமல் போயுள்ளது.
கூடவே, மணமகனும் மாயமானது தெரியவந்துள்ளது. இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.