6 மாத குழந்தையை பேரலில் மூழ்கடித்து தாய் கொலை - பரபரப்பு வாக்குமூலம்
6 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாய் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
குழந்தை கொலை
புதுக்கோட்டை, குளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). மகாராஷ்டிராவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (21). இவர்களுக்கு 6 மாதத்தில் ஆதிரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது.
இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், லாவண்யா தனது தாய் வீடான புலியூருக்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் தனது வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் அறுத்து கொண்டும்,
வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டும் சென்றுவிட்டதாக லாவண்யா கூறியுள்ளார். பின் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை தேடியதில், குழந்தை வீட்டிற்கு வெளியில் உள்ள தண்ணீர் பேரலில் இறந்து மிதந்துள்ளது.
தாய் வாக்குமூலம்
உடனே, சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து குழந்தை உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாவண்யா குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது அதிக பாசம் காட்டி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொலை செய்து விட்டேன். மேலும் 7 பவுன் தாலி சங்கிலியை வீட்டில் மறைத்து வைத்தேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாவண்யா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு IBC Tamil
