2வது கணவரை உதறிவிட்டு சிறுவனுடன் சென்ற தாய் - 3 குழந்தைகள் தவிப்பு
கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை பெண் கரம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவனுடன் காதல்
உத்தர பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷப்னம்(30). மீரட் நகரில் ஒருவரை திருமணம் செய்து, அவரை விவாகரத்து செய்துவிட்டார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
பின் 2வதாக சைதன்வாலி கிராமத்தில் வசித்த தவுபீக் என்பவரை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து 2011ல் விபத்து ஒன்றில் தவுபீக்குக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷப்னமுக்கு பிளஸ் 2 படிக்கும் சிவா என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தவிக்கும் குழந்தைகள்
அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் 2வது கணவருடன் விவாகரத்து கோரி, வாங்கியுள்ளார். பின் சிவாவுக்காக இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என பெயர் மாற்றி கொண்டு, திருமணம் செய்துள்ளார்.
தற்போது இந்த திருமணம் குறித்து சிவாவின் தந்தை கூறுகையில், மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த ஜோடி மகிழ்ச்சியாக இருந்தால், எங்களுடைய குடும்பமும் மகிழ்ச்சியடையும். அவர்கள் இருவரும் ஒன்றாக அமைதியான முறையில் வாழ்வார்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.