ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்க - இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை!
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால், அங்கு அமைதியை கொண்டு வரும் முயற்சியாக முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
வங்கதேசம் கோரிக்கை
தற்போது ஹசீனா ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையை முன்னிட்டு ஷேக் ஹசீனாவை
இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை வழக்கறிஞர் எம்.டி தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடந்த வன்முறையில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.