அரசியலே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும் - ஹசீனா மகன் திட்டவட்டம்!

Bangladesh
By Sumathi Aug 06, 2024 03:05 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

 ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா, 16 ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராக படஹ்வி வகித்தார். அந்நாட்டு விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்கள் போரட்டத்தில் குதித்தனர்.

அரசியலே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும் - ஹசீனா மகன் திட்டவட்டம்! | Sheikh Hasina Doesnt Want Politics Son Said

இதில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்ந்துவிட்டது. தொடர்ந்து ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு வந்தார்.

இந்தியர்கள் யாரும் அங்கே செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியர்கள் யாரும் அங்கே செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!

 மகன் உறுதி

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவரது மகனும், ஹசீனாவின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான சஜீப் வசத் ஜோய், வங்கதேசத்தில் நிலவி வரும் சம்பவங்களினால் அவர் மிகவும் அதிருப்தியுடன் உள்ளார். நாட்டையே ஹசீனா தலைகீழாக மாற்றினார்.

sheikh hasina

அவர் வரும்போது, ஏழை நாடாக இருந்த வங்கதேசம் இப்போது வளரும் ஆசிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கலவரத்தினால் நேற்றைய தினம் மட்டுமே 13 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மக்களை கொல்லும் போது போலீசார் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.