ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா சதி - மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா
ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா சதி உள்ளதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசம்
வங்கதேசத்தில், வெடித்த மாணவர் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தற்போது ராணுவ ஆட்சி அமலில் உள்ள நிலையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா
இந்த நிலையில், ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறும் முன், நாட்டுக்காக உரையாற்ற விரும்பியுள்ளார். ஆனால் போராட்ட குழுவினர், அவரது வீட்டை முற்றுகையிட்டதால் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சீக்கிரம் வெளியேற அறிவுறுத்தியதால் தன்னால் உரை நிகழ்த்த முடியவில்லை என தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, இதுதொடர்பாக தனது நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், "வன்முறையில் இறக்கும் உடல்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே நான் என் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. ஒருவேளை, நான் நாட்டில் தங்கியிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும்.
அமெரிக்கா
நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உங்கள் தலைவராக ஆனேன். நீங்கள் என் பலம். அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களே என் பலம். ஆனால், அவர்களே என்னை விரும்பவில்லை. அதனால்தான் நான் வெளியேறினேன். நான் விரைவில் திரும்பிவருவேன். நான் தோற்றுவிட்டேன், ஆனால் வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
போராட்டம் நடத்தும் மாணவர்களை, நான் ஒருபோதும் ரசாக்கர்கள் என்று அழைத்ததில்லை. மாறாக, உங்களைத் தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, முழு வீடியோவைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வங்கக்கடலை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. வாய்ப்பு கிடைத்திருந்தால், இதை தனது உரையில் கூறியிருப்பேன்" என கூறியுள்ளார்.