542 விக்கெட்கள்; 34 வயதில் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு - இந்தியாவே வேண்டாமாம்..

Cricket India Indian Cricket Team Jharkhand
By Sumathi Mar 06, 2024 07:46 AM GMT
Report

ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஷாபாஸ் நதீம் 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் ரஞ்சிக் கோப்பை தொடரில், இரண்டு சீசன்களில் அதிக விக்கெட்களை எடுத்தவராக அறியப்படுகிறார்.

shahbaz nadeem with virat kholi

2015ல் 51 விக்கெட்களையும், 2016-ல் 55 விக்கெட்களையும் சாய்த்து, சாதனை படைத்தார். 2018-ல் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில், 24 விக்கெட்களை கைப்பற்றி, அந்த சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக இருந்தார். தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

வெளிநாடு போட்டிகளில் விளையாட தடை !! அதிருப்தியில் ஓய்வு அறிவித்த பாக். வீரர்..!!

வெளிநாடு போட்டிகளில் விளையாட தடை !! அதிருப்தியில் ஓய்வு அறிவித்த பாக். வீரர்..!!

 ஓய்வு அறிவிப்பு 

முதல்தர போட்டிகளில் மொத்தம் 542 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்தியாவுக்காக 2 டெஸ்ட்களில் 8 விக்கெட்களை வீழ்த்தியதும் இதில் அடங்கும். தொடர்ந்து, 2019ல் நடைபெற்ற மினி ஏலத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை வாங்கியது. 2022ல் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி இவரை ஏலத்தில் வாங்கிய நிலையில், ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை.

542 விக்கெட்கள்; 34 வயதில் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு - இந்தியாவே வேண்டாமாம்.. | Shahbaz Nadeem Announces Retirement From Cricket

இந்நிலையில், 2024 ரஞ்சி தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ''இனி இந்திய அணிக்கு தேர்வாக முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனக்கு 34 வயதாகிறது.

இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கிக்கொள்வதே சிறந்தது. வெளிநாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்டில் மட்டுமே ஆடியியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.