தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு? - ரசிகர்கள் ஷாக்...!

Cricket Dinesh Karthik
By Nandhini 1 வாரம் முன்

தினேஷ் கார்த்திக் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

தினேஷ் கார்த்திக்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பினிஷராக விளையாடியவர் தினேஷ் கார்த்திக். 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால், இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால், டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பிறகு தினேஷ் கார்த்திற்கு இந்திய அணியின் வாய்ப்பு வழங்கவில்லை.

dinesh-karthik-cricket-sports

தினேஷ் கார்த்திக் ஓய்வு?

இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி என்று கூறி டோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது.

எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இவர் ஓய்வை அறிவித்து விட்டாரா என்று குழம்பி வருகின்றனர்.