பாலியல் வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான் - தீர்வு என்ன?
Relationship
By Sumathi
பாலியல் உறவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவான பிரச்சனைகள்
பாலியல் உறவில் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால், உச்சகட்டம் அடைய இயலாமை, பாலியல் உறவின்போது வலி ஏற்படுதல், பாலியல் வேட்கை குறைதல் போன்றவை தான்..
அதற்கான சில தீர்வுகள் குறித்து காணலாம்..
- பெண்ணுறுப்பில் பாக்டீரியா அல்லது பூஞ்சை காரணமாக தொற்று ஏற்படும்போது வலி ஏற்படும். ஆண்டிபயாடிக் மருந்துகள் இதற்கு தீர்வாக அமையும்.
- பாலியல் உறவு கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து இயற்கையாகவே லூப்ரிகண்ட் சுரக்க வேண்டும். அவ்வாறு அமையவில்லையென்றால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லூப்ரிகண்ட் வாங்கி பயன்படுத்தலாம்.
- இடுப்புப் பகுதியில் அழற்சி ஏற்படுவதன் காரணமாக வலி ஏற்படலாம். எனவே, மசாஜ், வலி நிவாரணி அல்லது லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை போன்றவை தீர்வாக அமையும்.
- மனமும், உடலும் நிம்மதியாக இல்லை என்றால் பாலியல் வேட்கை குறையலாம். இதற்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். மேலும், யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவை இதற்கு தீர்வு தரும்.
- பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.