90'ஸ் கிட்ஸ்களுக்கு பாலியல் உறவு மீதான ஈடுபாடு குறையுதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Marriage
By Sumathi Jul 30, 2023 11:09 AM GMT
Report

90's கிட்ஸ்களுக்கு பாலியல் உறவு மீதான நாட்டம் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

90's கிட்ஸ்

செக்ஸ் டாய்ஸ் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் தங்கள் துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தின. அது அமெரிக்காவில் நடத்தப்பட்டது. உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில்,

90

குறிப்பாக 1980 ஆம் ஆண்டிற்கும்-1990களுக்கும் இடையே பிறந்த தலைமுறையினருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. 26 சதவீதத்தினர் பாலுறவில் நாட்டமின்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலியல் உறவு

1965 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்த தம்பதியருள் 21 சதவீதம் பேருக்கும், 2010க்கு முன்பு பிறந்த தம்பதிகளில் 10.5 சதவீதம் பேருக்கும் பாலியல் ஆர்வம் குறைந்திருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

90

மேலும், 90'ஸ் கிட்ஸ்களுள் பணிச்சுமை அதிகம் காரணமாகவும், புதிதாக குழந்தை பெற்ற தம்பதியரும் பாலியல் உறவில் நாட்டம் குறைந்து காணப்பட்டதும் தெரியவந்துள்ளது. பணிச் சுமைக்கும் மன அழுத்ததிற்கும் ஆளாகி இல்லற வாழ்வின் மீதான நாட்டத்தை இழந்திருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.