ஜிலேபி பாபா மரணம்; பல பெண்களிடம் பாலியல் வன்கொடுமை - யார் இவர்?
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜிலேபி பாபா மரணமடைந்தார்.
பாலியல் வன்கொடுமை
ஹரியானா, தோஹானா மாவட்ட பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர் புரி என்ற ஜிலேபி பாபா.

இவர் பூஜைக்கு மக்களை அழைத்து தேநீரில் போதை வஸ்துகளை கலந்து கொடுத்து சுய நினைவை இழக்க செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள் பலர் போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் 2018ல் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவரது குடியிருப்பில் போலீஸார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் மற்றும் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. இந்த விவகாரத்தின் கீழ் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜிலேபி பாபா மரணம்
இந்நிலையில், இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் உடல்நிலை சீராகி மீண்டும் ஹிசார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, மாரடைப்பு காரணமாக ஜிலேபி பாபா சிறையில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சாமியாராக மாறுவதற்கு முன் தோஹானா ரயில் நிலையம் அருகே ஜிலேபி விற்று வந்ததால் அவரை ஜிலேபி பாபா என அனைவரும் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan