Sunday, May 11, 2025

2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - அதிர்ச்சி பின்னணி!

Sexual harassment Kerala Crime
By Sumathi a year ago
Report

தந்தை 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 40 வயது தொழிலாளி. இவருக்கு மனைவியும், 6, 8 வயதில் 2 மகள்களும் உள்ளனர். இதில் மனைவி வேலை காரணமாக வேறொரு இடத்தில் தங்கி இருந்துள்ளார்.

2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - அதிர்ச்சி பின்னணி! | Father Raping 2 Daughters Repeatedly Kerala

இதனால், 2 மகள்களும் தந்தை வீட்டிலும், பாட்டியின் வீட்டிலும் தங்கி இருந்து வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், 6 வயதான சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

3 ஆயுள் தண்டனை

உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியிடம் மதுபோதையில் அவரது தந்தையே அத்துமீறியுள்ளார். மேலும், 8 வயதான மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - அதிர்ச்சி பின்னணி! | Father Raping 2 Daughters Repeatedly Kerala

பின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ரு மகளை பலாத்காரம் செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகளை பலாத்காரம் செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், தந்தை என்ற பெயருக்கும், நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.