3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி!

Tamil nadu Chennai Sexual harassment Crime
By Jiyath Feb 02, 2024 03:00 AM GMT
Report

அடையாளம் தெரியாத நபரால் 3 சிறுமிகள்பாலியல் வன்கொடுமை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை 

சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய 3 சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி! | 3 Children Were Sexually Abused In Chennai

இந்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அதில், சிறுமிகளை அடையாளம் தெரியாத நபரிடம் அழைத்துச் சென்றது 4-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து அந்த சிறுமியிடம் அவரின் குடும்பத்தினர் நடத்திய விசாரணையில், "தங்களை சாக்லேட் தருவதாக கூறி அந்த 4-ம் வகுப்பு மாணவன் குறிப்பிட்ட அடுக்குமாடிக்கு அழைத்துச் சென்றார்.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

3 தனிப்படைகள்

அங்கு ஒருவர் தங்களுக்கு சாக்லேட் கொடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எங்களிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டார்.

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி! | 3 Children Were Sexually Abused In Chennai

இதுகுறித்து வெளியில் வெளியில் சொல்லக் கூடாது என்றும் அந்த நபர் மிரட்டியதாக சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 4-ம் வகுப்பு மாணவனுக்கு, அந்த மர்ம நபர் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.