100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; சிக்கிய ஜிலேபி பாபா - யார் இவர்?
120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜிலேபி பாபா தண்டனை பெற்றுள்ளார்.
ஜிலேபி பாபா
ஜிலேபி பாபாவின் இயற்பெயர் அமர்புரி. 23 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தின் மான்சா நகரில் இருந்து தோஹ்னாவுக்கு வந்திருக்கிறார். அவரது மனைவி காலமாகிவிட்டார் . அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகளும் உண்டு . குடும்ப வருமானத்திற்காக 13 ஆண்டுகளாக ஜிலேபி கடையை நடத்தி வந்திருக்கிறார்.
பின்னர் அவர் ஒருவரிடம் மந்திர தந்திரத்தை கற்றுக்கொண்டு அமர்வீர் என்ற பெயரை ஜிலேபி பாபா என்று மாற்றிக் கொண்டு சில வருடங்களாக மாயமாகி இருக்கிறார் . பின்னர் ஒரு கோயிலுடன் ஒரு வீட்டை கட்டி தோஹ்னாவுக்கு திரும்பி இருக்கிறார். ஜிலேபி பாபாவை பெண்கள் சுற்றி சுற்றி வந்து பின்பற்றி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை
கடந்த 2018 ஆம் ஆண்டில் கோவிலுக்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் ஜிலேபி பாபாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. அதன் பின்னர் ஜிலேபி பாபா தனது வேலைகளை பல பெண்களிடம் காட்டி பலரையும் தன் வளையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்திருக்கிறார்.
இந்த ஆதாரங்களை எல்லாம் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து ஹரியானா நீதிமன்றம் ஜிலேபி பாபாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.