தீவிரமாக பரவும் குரங்கு அம்மை நோய் - பாதிப்போர் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு..!
குரங்கு அம்மை நோய் உலக நாடுகளில் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.
குரங்கு அம்மை நோய்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றால் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளனது. கொரோனா பெருந்தொற்றால் பலரும் உயிரிழந்தனர்.
தற்போது வரை கொரோனா நோய் தாக்கம் குறையாத நிலையில் தற்போது குரங்கு அம்மை என்ற புதிய வகை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயர்ந்தது பாதிப்பு
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.