தலைதூக்கும் கொரோனா பாதிப்பு - 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் உயிரிழப்பு!
தஞ்சாவூரில் 18 வயது இளம் பெண் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 58 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், கோவையில் 26 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.
பலியானோர் எண்ணிக்கை
அத்துடன் தமிழகம் முழுவதும் 1,938 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மூன்று மாதங்களாக கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.
இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித நோயும் இல்லாத நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது.
நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? சர்க்கரை நோய் முதல் உடல் எடை வரை..!