கட்டண பாக்கி - Google Playstore-லிருந்து நீக்கப்பட்ட பிரபலமான 10 இந்திய App-கள்!
கட்டணத்தை கட்ட தவறிய 10 இந்திய செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ப்ளே ஸ்டோர்
உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் தங்களது ஆப் (App) எனப்படும் செயலிகளை "கூகுள் ப்ளே ஸ்டோர்" தளத்தில் கட்டமைத்து இருந்தன. இதிலிருந்து செயலிகளை பயனர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் நேற்று கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "எந்த விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றங்களோ, கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்திற்கு உள்ள உரிமையை தடை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இல்லை.
செயலிகள் நீக்கம்
எங்களுக்கு உரிமையுள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிகள், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம்.
ஆனால், அவை கட்டணத்தை கட்ட தவறின. எனவே, அவற்றை நீக்கி விட்டோம்" என்று தெரிவித்துள்ளது. ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், நவுக்ரி.காம் (naukri.com), நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம் (99acres.com), பாரத்மேட்ரிமோனி.காம் (bharatmatrimony.com) மற்றும் ஷாதி.காம் (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.