குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய காரணம் என்ன? மாஸ்டர் பிளான்!
ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராக்கெட் ஏவுதளம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஏவுதளம் 2,233 ஏக்கர் பரப்பளவில் ரூ.950 கோடியில் அமைகிறது.
இந்த புதிய ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஏவுதளத்திலிருந்து சிறிய வகை ராக்கெட்களை ஏவ முடியும். இந்த இடத்தை தேர்ந்தெடுத்தற்கான புவியியல் அமைப்பே காரணம்.
குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது. பூமத்திய ரேகைக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்து ராக்கெட் ஏவப்படுகிறதோ, அந்த அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.
என்ன காரணம்?
ஸ்ரீரீஹரிகோட்டாவிலிருந்து ஏவும்போது செலவாகும் எரிபொருளை விட, குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுக்கு குறைவான எரிபொருளே செலவாகும்.
இரண்டாவது காரணம், இனி வரும் காலங்களில் சிறிய செயற்கைக்கோள்களுக்கான உலகளாவிய சந்தை மிகப்பெரியதாக விரிவடையும். 2020-ம் ஆண்டு 3215.9 மில்லியன் டாலராக இருந்த இதன் மதிப்பு 2030-ம் ஆண்டில் 13,711.7 மில்லியன் டாலராக அதிகரிக்கும்.
இதுகுறித்து முன்கூட்டியே கணித்த இந்தியா விண்வெளித்துறையில் அந்திய முதலீட்டை அனுமதித்திருந்தது.
இதன் மூலம் உலக நாடுகளிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் சிறிய வகை செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி வைக்கும். இதன் மூலம் நாட்டின் வருவாய் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.