சர்ச்சையை கிளப்பிய ராக்கெட் ஏவுதளம் விளம்பரம் - அமைச்சர் அனிதா விளக்கம்!
ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அனிதா வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கெட் ஏவுதளம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளம் விழாவில் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நாளிதழ் ஒன்றில் திமுக சார்பில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலின் இருவரது புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
சர்ச்சை விளம்பரம்
பின்னணியில் ராக்கெட் படம் ஒன்றில் சீன நாட்டின் கொடி இருந்ததால் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் “இந்த விளம்பரம் திட்டமிட்டு வெளியிடப்படவில்லை. விளம்பரத்தை டிசைன் செய்த நிறுவனத்தினர் கவனிக்காமல் இந்த ராக்கெட் படத்தை வைத்துவிட்டனர். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஒரு விளம்பரம் குறித்து பிரதமர் பேசியிருப்பது தமிழகத்தில் அவர்களது தோல்விபயத்தைக் காட்டுகிறது” என்று விளக்கமளித்தார்.