நெருங்கும் தேர்தல்: தமிழகத்திற்கு பிரதமர் மோடி திடீர் 2 நாள் வருகை!
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ சார்பில் 2,233 ஏக்கரில் கட்டபடவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.

மேலும், ஏவுதளம் அமைக்கும் பணி மற்றும் வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க கோவை சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். வரும் 27, 28-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாடு வருகை
தொடர்ந்து, ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள ‛என் மண் என் யாத்திரை’ நிறைவு விழா

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், பிரதமர் மோடி அவ்விழாவில் கலந்துக்கொள்ளப் போவதாகவும் தெரியவந்துள்ளது.