தனி தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் - ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்!
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் தனியாகக் கழன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேது எக்ஸ்பிரஸ்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - சென்னை இடையே சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.51 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து இரவு சென்னைக்குப் புறப்பட்டது. இதனை தொடர்ந்து,ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக இந்த ரயில் நள்ளிரவு 1 மணிக்குத் திருச்சி சென்றது.
அதன்பிறகு சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது. இந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்தைக் கடந்த போது திடீரென்று ரயிலின் 3 பெட்டிகள் தானாகவே தனியே கழன்றன.
இதனை இன்ஜின் டிரைவர் கவனிக்கவில்லை. மேலும் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் அப்படியே நிற்க மற்ற பெட்டிகளுடன் ரயில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று பெட்டியிலிருந்த பயணிகள் ரயில் வெகு நேரம் ஆகியும் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தனர்.
ரயில் பெட்டிகள்
அப்போது சில பயணிகள் வெளியே வந்து பார்த்த போது மற்ற பயணிகளுடன் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து 500க்கும் மேற்பட்ட அலறினர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து
சேது எக்ஸ்பிரஸ் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கவே அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
மேலும் சில மணி நேரங்கள் கழித்து தனியாகக் கழன்ற 3 பெட்டிகளை மீண்டும் ரயிலுடன் இணைக்கப்பட்டு திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.